Monday, December 14, 2009

திரும்பி விட்டேன்...

நல்லா வாசிங்க. திருந்திவிட்டேன்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க... அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது.. இந்தியாவில் இருந்து வந்து ஓரு மாதம் ஆகிறது.. இப்பெல்லாம் கம்பெனியில் நிறைய ஆணிகள் புடுங்க வேண்டி இருப்பதாலும், பதிவுலகத்தில் இல்லாத இந்த ஐந்து மாதங்கள் தேவையில்லாத மன உளைச்சல் இல்லாததாலும் பதிவை எட்டி பார்க்க ஆர்வம் இல்லாமல் போனது..

இன்னும் சாரு, இளையராஜா , விஜய் அஜீத், மற்றும் பலரை குறித்து சண்டைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது..? யாரும் திருந்திரலேல்லே.

அப்புறம் இன்னமும் துபாய் பதிவர் சந்திப்பில் சுந்தர் அண்ணன் வடை கொண்டு வருகிறார்களா? கலை இன்னும் வடையை ஆட்டையை போடுகிறானா? வினோத்தும் கிஷோரும் சண்டை போடுறதை நிப்பாட்டி விட்டார்களா?

இப்பிடி நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அதனை கேக்காமல் நான் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.

முதல்ல ஊருக்கு போன உடனே தும்முனா, இருமுனா, முக்குனா எல்லாத்தையும் பதிவா போட்றலாமேன்னு தோணுச்சு.... இப்போதான் அந்த நினைப்புல்லாம் இல்லாம எல்லாத்தையும் செய்யுறேன்.. இப்போ மறுபடியும் ”ஐ ம் பேக்”

முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே எல்லா முக்கிய செய்திகளும் இதுலயே கிடைக்குதேன்னு நினைச்சேன்.. ஆனா ஊருக்கு போன உடனேதான் தெரிஞ்சுது.. பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு..


பதிவர்களுக்கு ஓரு வேண்டுகோள்

ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.

உங்களை யாரும் தினமும் பதிவு போட்டுதான் ஆகணும்னு கட்டாயபடுத்தலை.. அப்பிடி போட்டு வர்ற ஹிட்ஸை வச்சு நாக்கு கூட வளிக்க முடியாது...

நல்ல பொழுதுபோக்கான , உபயோகமான தகவல்களை பகிருங்கள்... இன்னைக்கு பதிவுலகில் மொக்கைகள்தான் பெருவாரியாக உள்ளது. அதிலயே போய் பத்தோடு பதினொன்னா ஆகுறதுக்கு பதில் .. உபயோகமான தகவல்களை பகிர்ந்து தனித்து தெரியலாமே.. அப்பிடி பட்ட தகவல்கள் கிடைக்குற வரைக்கும் நம்ம பதிவே போடலேன்னாலும் ஓண்ணும் ஆக போறதில்ல... ஆகவே பதிவு போடுறதுக்கு முன்ன ஓருமுறை யோசிச்சுங்கோங்க...

Monday, June 22, 2009

The Flight Plan – ஏரோப்ளேன்ல ஏடாகூடம் - விமர்சனம்



நம்ம கலை, வினோத்லாம் இங்கிலீபீஸ் படத்தை பத்தி விமர்சனம் எழுதும் போதெல்லாம் நமக்கு எதுக்கு இந்த கருமம் புடிச்ச வேலைன்னு நினைச்சு அதை படிச்சே பார்க்காம கமெண்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன். ஆனா அதுக்கு அடுத்த வாரமே இந்த கிஷோரு பயலும் இங்கிலிஸ் படத்தை பத்தி விமர்சனம் எழுதுனத பார்த்த உடனேயே முடிவு எடுத்துட்டேன் நாமளும் ஓரு இங்கிலிசு படத்த பத்தி விமர்சனம் போட்றணும்டா அப்பிடின்னு. உடனே ஒரு பிரண்ட்கிட்ட சொல்லி இங்கிலிஸ் பட கலெக்‌ஷன் வாங்கிட்டு வந்திட்டேன். விமர்சனம் எழுதறதுக்காக ஒவ்வொரு படமா பாக்குறேன் .!! கருமம்... கருமம்...!! அதுல முக்கால்வாசி படத்தை பத்தி எழுதவே முடியாது. அதுல தேடிபுடிச்ச ஒரு நல்ல படம் “The Flight Plan”



Director: Robert Schwentke


Starring: Jodie Foster, Peter Sarsgaard, Erika Christensen, Sean Bean, Haley Ramm


விமானம் பறந்து கொண்டிருக்கும்போது நீங்கள் அழைத்து வந்த ஆறு வயது சிறுமி காணாமல் போனால் .. எப்படி இருக்கும்? அதெப்படி பறக்கும் விமானத்தில் சிறுமி காணாமல் போக முடியும் என ஆச்சர்யங்களை அதிகபடுத்தி கொண்டே நகர்கிறது “The Flight Plan” . முழுக்க முழுக்க நாயகியை பிரதானமாக கொண்டு நகர்வதால் படம் வித்தியாசமாக என் கவனத்தை கவர்ந்தது.


வீட்டின் மாடியில் இருந்து கணவன் விழுந்து இறந்து விடுகிறான். அதற்கு மேலும் அந்த வீட்டில் வசிக்க முடியாமல் கணவனின் சடலத்துடனும் தன் மகளையும் அழைத்து கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு ஜுடி ஃபோஸ்டர் கிளம்புகிறார். கணவரின் பிரேதத்துடனும், தன் ஆறு வயது மகளுடனும் நாயகி தன் பெற்றோரின் வீட்டிற்கு செல்ல விமானத்தில் ஏறிய உடன் அதுவரை இருந்த தொய்வு நீங்கி வேகம் கூடுகிறது.

காலியான இருக்கையில் மகளை படுத்து தூங்க வைத்து பின் தானும் தூங்கி எழுந்து பார்க்கும் போது மகளை காணாமல் திடுக்கிடும்போது திரைகதையில் கூடும் பரபரப்பு விமானியிடம் புகார் செய்ததும் அவர்கள் செக் இன் சார்ட்டில் பார்த்து விட்டு அப்படி ஓரு பயணி விமானத்தில் ஏறவே இல்லை எனும்போது பரபரப்பின் உச்சகட்டத்திற்கு போகிறது.

அருகில் உள்ளவர்களும் பார்க்கவில்லை என்றபோதும் நாயகியின் வற்புறுத்தலால் தேடிபார்க்க விமானி உத்தரவிடுகிறார். அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து இல்லை என சொல்லவும் நாயகி பாத்ரூம் செல்வதாக சொல்லி அதிலிருந்து கூரையை உடைத்து வெளியேறி பாதுகாப்பு அலாரத்தை அலற செய்து பின் பாதுகாப்பு அதிகாரியிடம் மாட்டும் போது சக பயணிகள் அனைவருமே நாயகியை மனநோயாளியாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

உண்மையில் மகளுடன் பயணம் செய்தாளா? அவள் மனநோயாளியா? இல்லையென்றால் அவளுடைய ஆறு வயது மகள் என்ன ஆனாள்? யார் இதை செய்தார்கள்? எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை திருட்டு விசிடியில் கண்டு களிக்கவும்..

டிஸ்கி:

இப்பல்லாம் ஆபிஸ் டையத்துல ஆபிஸ் வேலையைதான் பார்க்கணும்னு ஆபிஸருங்க கொடுமைபடுத்தறதுனால கடந்த ஒரு வாரமா என்னால ஆன்லைனுக்கு வரமுடியல என்பதையும் இங்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
என்ன கொடுமை சரவணன் இது.????

Saturday, June 13, 2009

கவுஜ….கவுஜ




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!

- கண்ணா.

 

©2009 கண்ணா | Template Blue by TNB